உள்ளடக்கத்துக்குச் செல்

மாய வித்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாய வித்தை
The Conjurer (painting)

மாய வித்தை அல்லது செப்பிடு வித்தை என்பது நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்று. இது ஒரு நிகழ்த்து கலை. மீவியற்கை போன்று, அல்லது முடியாதது போன்று தோன்றும் செயல்களைச் செய்து பார்வையாளர்களை மகிழ்விப்பதே இக்கலையாகும். இக் கலையைச் செய்பவரை மாய வித்தைக்காரர் அல்லது மந்திரவாதி என்பர். மந்திரமா- தந்திரமா என ஒன்றும் புரியாமல் காண்போரைத் திகைக்க வைக்கும் இக்கலையினைச் சாலவித்தை, இந்திர சாலம்,[1] கண்கட்டி வித்தை, மாயவித்தை, கரடி வித்தை, மாஜிக் என்று பலவாறாகக் கூறுவர். செப்பிடு வித்தைக் கலையில் அனைத்துக் காட்சிகளும் ஒளிவு மறைவானவை. காட்சியைக் காண்போர் இதனை உண்மை என நம்பும் வண்ணம் அக்காட்சிகள் அமையும். இக்கலையில் கையாளப்படும் தந்திரங்கள் மிகவும் எளிமையனவை ஆனால் பார்வையாளர்களைத் திகைக்க வைப்பவை.[2]

வகைகள்

[தொகு]

செப்பிடு வித்தைக் கலை நான்கு வகைப்படும். அவை:

  1. சாதாரன செப்பிடுவித்தை- கை தந்திரமாக ஒளித்தும் மறைத்தும் செய்தல்
  2. மேசை வித்தை- மேசையில் சில மறைவிடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சில தந்திரங்கள் செய்தல்
  3. கண்ணாடி வித்தை- இரசக் கண்ணாடியைக் கொண்டு தந்திரமாக சில காட்சிகளைச் செய்தல்
  4. கருப்பு வித்தை- கருப்பு வண்ணத் திரைச் சீலைகளைக் கொண்டு தந்திரமாக சில காட்சிகளை அமைத்தல் ஆகியன[2]

செப்பிடு வித்தையாளர்கள்

[தொகு]
  • பி. சி. சர்க்கார் - வங்காளம்
  • பி. சி. சர்க்கார் (ஜூனியர்)
  • கே. லால் - கொல்கத்தா
  • மதுகாந்தா - மகாராஷ்டிரா
  • பீதாம்பர அய்யர்- தமிழ்நாடு, திருச்சி மாவட்டம்
  • கிரேட் அப்பாதுரை- பொள்ளாச்சி
  • பிரேம்நாத் கேரளா
  • பாக்கியநாத்- சென்னை
  • சி. கிருஷ்ணமூர்த்தி- மதுரை
  • கே. ஆர். குமார் - கும்பகோணம்
  • சிவந்தமண் ராதிகா (நடிகை)- சென்னை
  • ஜூலி
  • சௌமியா ஷபாத் - களக்காடு (திருநெல்வேலி)
  • இராஜேஸ்வரி - சேலம் ஆகியோர்.[2]
  • ஆர்த்தி மங்களா - சென்னை
  • கோபிநாத் முத்துக்காடு - கேரளா [3]
  • பிரகலாத் ஆச்சார்யா - கருநாடகம்

மேலதிக வாசிப்பிற்கு

[தொகு]
  • மந்திரமா - தந்திரமா, அ. வள்ளி நாயகம், அறிவியல் வெளியீடு.1999.
  • புலிப்பாணி ஜாலத் திரட்டு(ஓலைச் சுவடி)
  • அகத்தியர் ஜால நிகண்டு(ஓலைச் சுவடி)

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. கலைக்களஞ்சியம் தொகுதி 2.
  2. 2.0 2.1 2.2 தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2012. pp. 210, 215.
  3. "Indian magician performs Houdini-like escape". Rediff.com. 14 February 1997. பார்க்கப்பட்ட நாள் 3 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாய_வித்தை&oldid=3794901" இலிருந்து மீள்விக்கப்பட்டது